இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை!

0
68

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற வளிமண்டலவியல் இடையூறின் காரணமாக இன்று (14) மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி மத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.