டைட்டானிக் கேப்டன் நடிகர் உயிரிழப்பு

0
49

ஜேம்ஸ் கமரூன் தயாரித்து இயக்கி கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டைட்டானிக். இது காதலையும் கப்பலையும் இணைத்த ஒரு அழகிய காதல் காவியம்.

மிகவும் பிரபலமான திரைப்படமான டைட்டானிக்கில் கேப்டன் எட்வார்ட் ஜான் ஸ்மித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பெர்னார்ட் ஹில்.

79 வயதான இவர் உடல் நலக்குறைவினால் நேற்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவுச் செய்தியை இவருடன் இணைந்து நடித்த பார்பரா டிக்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், ‘பெர்னார்ட் ஹில் உயிரிழந்த செய்தியை மிகவும் துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் பெருமையாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல் பென்னி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.