இணையம் இல்லாமலே புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரலாம்: வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்

0
110

உலகளாவிய ரீதியில் அனைவரும் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. நமது வேலைகளை இலகுவாக்குவதில் வாட்ஸ் அப் முதலிடம் வகிக்கிறது.

அந்த வகையில் தற்போது இணையம் (இன்டர்நெட்) இல்லாமலேயே புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை பயனர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய அம்சம் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களது பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புது புது விடயங்களை அறிமுகப்படுத்தும் வாட்ஸ் அப்பின் இந்த புதிய அறிவிப்பு அனைவரையும் நிச்சயம் கவரும். இந்த புதிய அம்சமானது ப்ளூடூத் துணையுடன் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஃப்லைன் பைல் ஷேரிங் (offline file sharing) அம்சத்தை பயனர்கள் அப்டேட் செய்திருந்தால் மாத்திரமே ஃபைல்களை அனுப்பவும் பெறவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.