14 வயது சிறுமியின் கருவை கலைக்க இந்திய நீதிமன்றம் அனுமதி

0
46

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க இந்திய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் கருவை கலைக்க அனுமதி பெற மும்பை நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரு பிறந்து 30 வாரங்களை கடந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதை காரணம் காட்டி கருவை கலைக்க அனுமதி மறுத்தனர்.

சிறுமியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தை அடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான குழு கருவை கலைக்க அனுமதி அளித்துள்ளது.

சிறுமிக்கு முன்னதாகவே மருத்துவப் பரிசோதனை செய்து கருக்கலைப்பு செய்யலாமா? கருக்கலைப்பு பெண்ணை பாதிக்குமா? இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று (2024.04.22) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சியோன் வைத்தியசாலையின் பரிந்துரையின் பிரகாரம் கருக்கலைப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.