கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்கக் கோரும் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளா?: பேராசிரியர் வசந்த சேனா வெளிஅங்க கேள்வி

0
32

‘கஞ்சாவை சட்டபூர்வமாக அனுமதிக்க வேண்டும் என ஒரு மக்கள் பிரதிநிதியே நாடாளுமன்றத்தினுள் கூறும் போது அது தொடர்பிலான தகவல்களை வழங்க ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் ஒருவரால் ஏன் முடியாது’? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவதாக பேராசிரியர் வசந்த சேனா வெளிஅங்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

தன்னால் 5 வருடங்களாக சேர்க்கப்பட்ட கஞ்சா செடியின் வெவ்வேறான பகுதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், கைவினைப் பொருட்கள், இனிப்புகள், அழகுசாதன பொருட்கள், மூலிகைகள் மற்றும் உணவு வகைகள் போன்றவற்றை எவராலும் ஆராய அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் வசந்த சேனா வெளிஅங்க கஞ்சா வளர்ச்சிக்கு முயற்சி செய்வது தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் லுணுகம்வெகெர பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘என்னிடம் உள்ள இந்த பொருட்களை ஜனாதிபதி காரியாலத்தில் விசேட குழுவொன்றில் முன்னிலைபடுத்தினேன். தொலைக்காட்சி ஊடகங்கள் சிலவற்றின் மூலமும் முன்னிலைபடுத்தினேன். நான் திருடவோ குற்றம் இழைக்கவோ இல்லை.

அப்படியானால் கஞ்சா பயன்பாட்டை சட்டரீதியாக அமுல்படுத்தக் கோரும் அரசியல்வாதிகள் பொதுமக்கள் கூட குற்றவாளிகளாக வேண்டும்? ஆனால் அவர்களுக்கு அவ்வாறு நடக்கவில்லை.

கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டும். அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பிரியோசனமாக அமையும் எனத் தெரிவித்த முதல் மனிதன் நான் அல்ல. எனக்காக நீதிமன்றம் சட்டத்தை நிறைவேற்றும் என நான் நம்புகின்றேன்.‘ என தெரிவித்தார்.