தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா?: அதிகாரத்தை கைப்பற்ற மோதும் மைத்திரி – சந்திரிக்கா

0
29

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக கட்சிக்குள் பாரிய அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தரப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவை பதில் தலைவராக நியமித்துள்ளது.

மைத்திரியின் தரப்பு அமைச்சர் விஜேதாசவை பதில் தலைவராக நியமித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தொடர முடியாதுள்ளதால் விஜேதாசவை அதிகாரமிக்கவராக மாற்றும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த நீதிமன்ற அமர்வுக்கு முன்னதாக இருதரப்பினரும் கட்சியின் அதிகாரத்தை சட்ட ரீதியாக கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நீதி அமைச்சராக பணியாற்றும் விஜேதாச ராஜபகச் சட்டத்தை ஆழமாக அறிந்துள்ளவர் என்பதால் மைத்திரியின் தரப்பு கட்சியின் செல்வாக்கை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இதனால் சு.கவில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து வருவதுடன் அதிகாரத்தை யார் கைப்பற்ற போகின்றனர் என மைத்திரி மற்றும் சந்திரிகாவின் தரப்பினர் சட்ட ரீதியான மோதலில் ஈடுபட்டுள்ளனர்.