ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

0
48

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார இன்று செவ்வாய்கிழமை (23) காலை காலமாகியுள்ளார்.

இவர் திடீர் சுகவீனம் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாத்தளை விஞ்ஞானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தனது உயர் கல்வியை பேராதனை மற்றும் மொரட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களில் நிறைவு செய்து  பொறியாளராக  தனது தொழிலை ஆரம்பித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தின் தலைமைப் பொறியாளர் மற்றும் உட்கட்டமைப்பு பொது முகாமையாளர்  உள்ளிட்ட பல உயர் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.