இன்றிரவு இலங்கையில் தெரியவுள்ள ‘லிரிட் விண்கல் பொழிவு’: வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்

0
32

வருடாந்தம் புலப்படும் லிரிட் (Lyrid) விண்கல் பொழிவானது இன்று மேற்கு வானில் இலங்கைக்கு தெரியும் என விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வீனா எனப்படும் நட்வத்திர வடிவ அமைப்புடன் ஒரு மணிநேரத்துக்கு குறைந்தது 20 விண்கற்களை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கள் பொழிவானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரையில் நீடிக்கும். இது நாளை காலை முழுமையாகத் தெரியும் என்றாலும் முழு நிலவு இருப்பால் பார்ப்பது கடினமாக இருக்கும்.

வார இறுதியில் தோன்றும் முழு நிலவானது இந்த விண்கல் பொழிவைப் பார்ப்பதைக் கடினமாக்கும் ஆனால் சில விண்கற்களை மட்டும் மக்களால் பார்க்க முடிவதோடு, இவை முடிந்தவரையில் வானத்தை இருட்டாக்க உதவுகிறது.

குறித்த விண்கல் பொழிவைப் பார்ப்பதற்கு அதிகாலை 4 முதல் 5 மணி வரை சிறந்த நேரம். லிரிட் விண்கல் பொழிவு என்பது ஏப்ரல் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரையில் நிகழும் விண்கல் செயல்பாட்டின் வெடிப்பு ஆகும்.

விண்கற்கள் என்பது சிறுகோள்கள் அல்லது வால்மீன்கள் போன்ற சில பொருட்களின் பின்னணியில் எஞ்சியிருக்கும் சிறிய குப்பைகள் ஆகும்.

பூமியானது இந்த பொருளின் பாதையைக் கடக்கும்போது அது வளிமண்டலத்தில் விழும் இதன் துண்டுகளில் பலவற்றை எடுத்துக்கொள்கிறது.

வளிமணடலத்துடன் ஒப்பிடுகையில் இவை சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகரும். இந்த விண்கல்லின் மேற்பரப்பு 1600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பிரகாசமாக ஒளிரும். மேலும் இது வானத்தில் குறுகிய கால ஒளியின் கோடுகளாகத் தெரியும்.