அன்பே அழகே பாடல்; தமிழ் இசை ஆல்பத்தில் இலங்கை இளைஞன்!

0
120

Album name : Anbe azhake
Lyricist : M. Prabhakaran
Singer : Jithin Raj
Production Company : Sincere Production
Director : Midhun Bose

இந்தியா கேரள மாநிலத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய ஒரு தமிழ் ஆல்பம் பாடல் தான் அன்பே அழகே. ஒரு மெல்லிய பின்னணி இசையுடன் கூடிய உரையாடலின் பின்னனியில் ஆரம்பமாகும் ​​பாடல் மெதுவாக நம்மை ஒரு மகிழ்ச்சியான மெல்லிசைக்குள் இழுக்கிறது.

மேலும் பாடலின் தொனி அப்பாடலுடன் நகரும் ஓர் எதிர்பார்ப்பற்ற காதல் கதையின் காட்சியமைப்பை மிக அழகாகவே நமக்கு விளக்குகின்றது.

பாடலை முழுமையாக பார்வையிட : https://youtube.com/watch?v=XS3VjTK-FUg%3Fsi%3DtJNv4l75CaVRQvze

பாடலின் கதாநாயகியாக கேரளாவின் சமூக ஊடக பிரல்யம் நிவேதா சங்கருடன் இணைந்து நம் ஈழத்து மட்டக்களப்பு மாவட்ட இளைஞன் லுகிர்கன் எனும் ஒருவரே கதாநாயகனாக நடித்துள்ளனர். இதனை Sincere Production மீடியா கம்பெனி உருவாக்கியுள்ளது

மலையாள ரசிகர்கள் மற்றும் தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please subscribe sincere production Youtube channel: https://www.youtube.com/@Sincere_Productions