‘கில்லி’ படம் ரீ-ரிலீஸ்: முதல் நாளில் ரூ.10 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்ப்பு

0
48

இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பான காட்சிகள், அதற்கிடையில் ஆழமான காதல், கபடி விளையாட்டு, பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் என பார்ப்போரை சலிக்க வைக்காத திரைப்படம்.

இந்நிலையில் கில்லி வெளியாகி இந்த வருடத்தோடு 20 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை கொண்டாடும் விதமாக இன்று கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 20 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் கூட ரீ ரிலீஸில் மக்கள் கூட்டம் திரையரங்குகளை நிரப்பியுள்ளது.

அந்த வகையில் கில்லி திரைப்படத்தின் டிக்கெட் விற்பனையே சுமார் மூன்று கோடியைத் தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் இன்னும் சில நாடுகளில் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே பொக்ஸ் ஆபிஸில் சுமார் 10 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.