இராணுவ வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம்

0
33
Sri Lankan Army personnel march during a Victory Day parade rehearsal in Colombo on May 17, 2012. Sri Lanka celebrates War Heroes Week with a military parade scheduled for May 19. The parade celebrates the third anniversary of the military defeat of the Tamil Tiger rebels in May 2009, ending a 37-year long separatist conflict. AFP PHOTO/Ishara S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/GettyImages)

முறையான விடுமுறையின்றி சேவையில் இருந்து விலகியிருந்த இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியான முறையில் இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

2024 ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு முன்னதாக முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பின்வரும் ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்துக்கு மட்டும் சமூகளிக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து அவர்கள் இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கைகள் 72 மணித்தியலங்களுக்குள் மேற்கொள்ள நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வருபவர்கள் பின்வரும் ஆவணங்களை கொண்டு வருமாறு இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

  • இராணுவ அடையாள அட்டை (இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில்  பெற்றுக் கொள்ளப்பட்டபொலிஸ் அறிக்கையின் நகல்).
  • தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர நகல்.
  • சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் நகல்.
  • கடைசியாக பெற்றுக் கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் சம்பளப் பட்டியல் நகல் (இருந்தால் மட்டுமே).

இதேவேளை, முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காதது தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.