35 வயதான மாடல் அழகியை 4வது திருமணம் செய்துகொண்ட 85 வயது முதியவர்!

0
52

னாவை சேர்ந்த 85 வயதான பிரபல ஓவியர் பேன் ஜெங்கின் மூன்றாவது மனைவி உயிரிழந்துள்ள நிலையில் நான்காவதாக 35 வயதான மாடல் அழகியை அவர் திருமணம் செய்துள்ளனர்.

ஓவியர் பேன் ஜெங் சீனாவை சேர்ந்த 35 வயதான முன்னாள் மாடல் அழகியான சூ மெங் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

பேன் ஜெங் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அதில் இருந்து மீண்டார். அவரது ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழும் பேன் ஜெங் சமீபத்தில் ஓவியம் வரைவதை போன்ற ஒரு படத்தையும், நீண்ட கருப்பு முடியுடன் ஒரு இளம்பெண் அதனை பார்ப்பது போன்ற படத்தையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

அதனுடன் அவரது பதிவில், சூ மெங்கின் உன்னிப்பான கவனிப்பு என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையாக மீட்டெடுக்க உதவியது என்று கூறி இருந்தார்.

சூ மெங் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சீனா இன்டர்நேஷனல் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த அழகி ஆவார்.

பல சர்வதேச நிறுவனங்களுக்கு சர்வதேச பிராண்ட் மாடலாக இருந்த இவர் தற்போது தன்னை விட சுமார் 50 வயது அதிகமான கோடீஸ்வரரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களது திருமண செய்தி இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் சூ மெங்கை விமர்சித்து பதிவிட்டனர்.