யாழில் பெரும் சோக சம்பவம்… தீடிரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

0
54

யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 20 நாட்களாக சுகயீனமுற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

4  தினங்களுக்கு முன்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இரத்தப்புற்று நோய் காரணமாகசிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்றையதினம் (15-04-2024) மாலை உயிரிழந்துள்ளார்.

அல்வாய் தெற்கு உண்டுவத்தைப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 50 வயதான தங்கவேல் சதீஸ்குமார் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.