இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

0
50

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரான் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் (ஐசுபுஊ) சேர்ந்த ஏழு பேர் மற்றும் ஆறு சிரிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியாவுக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம்இ இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது. அதேவேளைஇ மத்திய கிழக்கில் ஒரு போரைத் தொடங்கும் வகையில் எதையும் செய்யவும் இரான் விரும்பவில்லை.

இரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.