காஸாவில் ‘துயரமான’ ரமலான்: போரில் பெற்றோர்களை இழந்தது தவிக்கும் குழந்தைகள்!

0
66

ரமலான் மாதத்தின் இறுதி நாளான ஈத்-அல்-பித்ர் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடும் நிலையில்இ காஸாவின் குழந்தைகள் தங்களிடமிருந்து ஈத் பண்டிகையின் மகிழ்ச்சி பறிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகின்றனர்.

ஐ.நா-வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்-இன் புள்ளிவிவரங்களின் படிஇ காஸா பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தொகையில் 1% பேர் அனாதைகளாக அல்லது கவனித்துக்கொள்ளக் குடும்பப் பெரியவர்கள் இல்லாத குழந்தைகள் ஆவர். அத்தனை முகாம்களிலும் தங்கள் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரையுமே இழந்த குழந்தைகள் உள்ளனர்.

‘இந்த ஈத் பெருநாள் முந்தைய ஈத் பெருநாட்களைப் போன்றதல்ல. போரின் காரணமாக நாங்கள் எங்கள் குடும்பத்தை இழந்திருக்கிறோம்இ’ என்று காஸாவின் ரஃபாவில் வசிக்கும் 11 வயதான லயன் கூறுகிறார்.

லயனும், 18 மாதமே ஆன வயதுடைய அவரது சகோதரி சிவாரும் மட்டுமே அவரது குடும்பத்தில் உயிர் பிழைத்தவர்கள். அவர்களது குடும்பத்திலுள்ள மற்றவர்கள், கடந்த அக்டோபர் மாதம் காஸா நகரத்தில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது அமருத்துவமனை தாக்கப்படதில் அவர்கள் அனைவரும் கொல்லப்படனர்.

அன்றிரவு லயன் தனது குடும்பத்தில் உள்ள 35 உறுப்பினர்களை இழந்தார்இ அதில் அவரது பெற்றோர் மற்றும் அவரது ஐந்து உடன்பிறப்புகளும் அடங்குவர்.

‘எங்கள் குடும்பம் அந்த மருத்துவமனையில் தஞ்சமடைந்து அரை மணி நேரமே ஆகியிருந்தது. அப்போது இரண்டு ஏவுகணைகள் எங்கள் மீது விழுந்தன. நான் கண்விழித்துப் பார்த்தபோது என் குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டனர்இ’ என்றார் லயன்.

காஸா நகரில் உள்ள மிகவும் பரபரப்பான அல்-அஹ்லி மருத்துவமனைமீது நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் இஸ்ரேல் ராணூவம் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இப்போது லயன் அவரது சகோதரியும்இ தங்களது அத்தை மற்றும் அத்தை மகனான அலியுடன் தெற்கு காஸாவிலுள்ள ரஃபாவில் ஒரு கூடாரத்தில் தங்கியுள்ளனர்.