“சேறு பூசாமல் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள்”

0
61

மருத்துவமனை உபகரணங்கள், திறன் வகுப்பறை உபகரணங்கள், பாடசாலை பேரூந்துகள் வழங்குவதை பகிர்ந்தளித்து வருவதான செயல் என்று எமது நாட்டிலுள்ள சிலர் அதை எதிர்த்து எனக்கு பல்வேறு புனைப்பெயர்களை சூட்டி வருகின்றனர். 

இவ்வாறு தனக்கு புனைப்பெயர்களை சூட்டி வருகின்றவர்கள் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் நானே பேருந்துகளை வழங்கி வைத்தேன். பேருந்தை நன்கொடையாக வழங்கிய பின்னரும் பேருந்து பழுதடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பரப்பி அரசியல் ரீதியான பொறாமைத்தன செயல்களை மேற்கொண்டு வருகின்றனர் என  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டில் யாராவது ஏதாவது நல்லது செய்தால் அதை சிலரால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய பொறாமை குணம் கொண்டவர்கள் என்ன சொன்னாலும், தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் நாட்டின் எதிர்காலம் மற்றும் முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்கள் குறித்து எந்நேரத்திலும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விவாதத்திற்கு வரும்போது, ​​அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு ஆற்றிய சேவை குறித்து பேசுவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு கூட தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாமல் சேறுபூசும் அரசியலை விடுத்து, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் குறித்த விவாதத்திற்கு முன்வாருங்கள், இந்த விவாதத்திற்கு நான் விருப்பத்துடன் கலந்து கொள்வேன். கலந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை கட்டியெழுப்ப வகுத்துள்ள வேலைத்திட்டத்தை முன்வைக்கவும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 148 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், புத்தளம், ஆனமடுவ, கன்னங்கர மாதிரி பாடசாலைக்கு 

வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 09 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.