இன்ஸ்டாகிராமில் இளவரசனாகும் இலங்கை வீரர் பத்திரன: ஒரு மில்லியன் பின்தொடர்பவர்கள்

0
50

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் தற்போது அதிகளவில் பேசப்படும் நட்சத்திரமாக இலங்கை அணியின் மதீஷ பத்திரன மாறியுள்ளார்.

லசித் மலிங்கவுக்குப் பிறகு, இந்திய பார்வையாளர்களின் அன்பைப் பெற்ற மதீஷ பத்திரன, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான அவரது பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை (Followers) கடந்த முதல் இலங்கை கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை மதீஷ பத்திரன பெற்றுள்ளார். லசித் மலிங்கவால் அந்த இலக்கை இன்னும் கடக்க முடியவில்லை.