மற்றுமொரு சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டிற்கு வருகை!

0
49

குயின் மேரி என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தின் புகட் நகரிலிருந்து குறித்த சொகுசு ரக கப்பல் வந்துள்ளது.

அதில் 2,290 சுற்றுலாப் பயணிகளும் 1,218 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

பிரித்தானியா, சுவிட்ஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.