பாரிஸில் கவனம் ஈர்த்த வினோத போட்டி!

0
133

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஹோட்டல் வெயிட்டர்களுக்கான பந்தயம் நடைபெற்றது. இதன்போது தண்ணீர் டம்ளர், காஃபி மற்றும் உணவு ரகங்களை தட்டில் எடுத்துக் கொண்டு வேகமாக செல்லும் பந்தயத்தில் சுமார் 200 வெயிட்டர்கள் பங்கேற்றனர்.

அதேவேளை 1914ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த பந்தயத்தில் ஆண், பெண் வெயிட்டர்கள் தங்கள் சீருடையுடன் 2 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை கடந்துள்ளார். இந்நிலையில் இந்த வினோத போட்டி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.