அடுத்த வாரம் இலங்கைக்கு வரும் முருகன், ஜெயக்குமார், பயஸ்

0
44

முன்னாள் இந்திய ப்பிரதமர் ராஜீவ் காந்தி கலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், பயஸ் ஆகியோர் அடுத்தவாரம் இலங்கைக்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசாங்கம் கூறியுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.

முருகன், ஜெயக்குமார், பயஸ் ஆகியோருக்கு தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகம் கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்தவாரம் இலங்கைக்கு 

இந்நிலையில் அடுத்தவாரம் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு கூறியுள்ளது. அதேவேளை ராஜீவ் காந்தி கஒலை குற்றச்சாட்டில் கைதான சாந்தன் தாயகம் வர காத்திருந்த வேளை சென்னையில் உயிரிழந்திருந்தமை சோகத்தை ஏற்பட்டுத்தியிருந்தது.

சாந்தனின் மரணத்தை அடுத்து எஞ்சிய மூவரையும் (முருகன், ஜெயக்குமார், பயஸ்) இலங்கைக்கு உயிருடன் அனுப்பி வைக்குமாறு பலவேறு தரப்பினரும் வலியுறுத்த வந்தமை குறிப்பிடத்தக்கது.