இந்துக்களின் சமரில் வென்ற யாழ் இந்துக் கல்லூரி

0
74

13 ஆவது இந்துக்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் – கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது இந்துக்களின் சமர் துடுப்பாட்டப் போட்டி நேற்றைய தினம் (16) யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

கொழும்பு இந்துக் கல்லூரி

கொழும்பு இந்துக் கல்லூரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் அணி சார்பில் அபிசேக் 14 ஓட்டங்களையும் நிதுஷான் 12 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் சுபர்னன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாம் இனிங்சில் 56 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணி சார்பில் பரிசித் 46 ஓட்டங்களையும் பிரேமிகன் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் கொழும்பு இந்துக்கல்லூரி சார்பில் நிதுசன், அபிஷேக் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்துக்களின் சமர் 

பதிலுக்கு தனது இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் டிலோஜன் 28 ஓட்டங்களையும், மிதுசிகன் 9 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் சுபர்னன் மற்றும் தரனிசன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.