இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா, இளம் வீரர் சர்ப்பராஸ் கனை ஃபீல்டிங்கில் நிற்க வைத்த வீடியோ ட்ரெண்ட் ஆகியுள்ளது.
தரம்சாலாவில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 473 ஓட்டங்கள் குவித்து, 255 முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக, இந்திய அணி ஃபீல்டிங் செய்தபோது அணித்தலைவர் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக, இளம் வீரர் சர்ப்பராஸ் கான் நின்றிருந்த இடத்தை மாற்ற நினைத்த ரோஹித் சர்மா, அவரை தோளைப் பிடித்து இழுத்து கிரீஸுக்கு அருகில் நிறுத்தினார்.
சொல்ற இடத்தில் நில்லுப்பா என்றவாறு ரோஹித் அவரை கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.