ஷவர்மா மீதான காதல்.. கனேடிய கவுன்சிலர் விடுத்துள்ள கோரிக்கை

0
142

ஷவர்மா மீதான காதலால், கனேடிய கவுன்சிலர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.

ஷவர்மா தலைநகர் என அழைக்கவேண்டும் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவை, கனடாவின் ஷவர்மா தலைநகர் என அழைக்கவேண்டும் என ஒட்டாவாவின் கவுன்சிலர்களில் ஒருவரான லாரா டுடாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒட்டாவாவின் ஷவர்மா தொழில்துறை, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் விடயம் என்று கூறும் லாரா, ஒட்டாவாவின் ஷவர்மா கனடாவிலேயே சிறந்த ஷவர்மா ஆகும்.

அது பல பகுதிகளிலுள்ள மக்களை இணைக்கிறது. இந்த ஷவர்மாவை, காலை உணவாகவும் சாப்பிடலாம், மதிய உணவாகவும் சாப்பிடலாம், இரவு உணவுகளில் ஒன்றாகவும் சாப்பிடலாம் என ஓயாமல் ஷவர்மா புகழ் பாடுகிறார்.

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவை, கனடாவின் ஷவர்மா தலைநகர் என அழைக்கவேண்டும் என லாரா விடுத்துள்ள கோரிக்கையின்பேரில், அது தொடர்பான பிரேரணை மீது விரைவில் கவுன்சில் உறுபினர்கள் வாக்கெடுப்பு நடத்த உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.