நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி

0
158

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் அஜித் இன்றையதினம் பிற்பகல் சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக வழமையான உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சுமார் 4 மணித்தியாலங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதாகவும் மூளையில் இருந்த கட்டியொன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மதுரை மற்றும் கேரளாவில இருந்து இரண்டு மருத்துவர்கள் வரவழைக்கபட்டு அஜித்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெவேளை, நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.