19 மாடி கட்டிடத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம்; ஆனால் சத்தம் கேட்காது: சீனாவின் அசத்தலான யோசனை!

0
129

பொதுவாக ரயில் பயணங்கள் செய்ய வேண்டுமென்றால் நாம் புகையிரத நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டாம். ஆனால் சீனா புதுவிதமான ஒரு முயற்சியை செய்துள்ளது.

அதாவது சீனாவில் மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு அந்தக் கட்டிடத்தில் ரயில் நிலையமும் செயற்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சீனாவின் மலை நகரம் என அழைக்கப்படும் சுன்கிங் என்ற பகுதியில் நிறைய உயரமான கட்டிடங்கள் உள்ளன. ஏற்கனவே இந்த 19 மாடி கட்டிடத்தின் 6ஆவது மற்றும் 8ஆவது தளத்தின் இடையே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இதன் வழியே தினமும் ரயில்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் அந்தப் பகுதியில் இன்னுமோரு ரயில் பாதையை அமைக்க முயற்சித்தபோது இந்த 19 மாடி கட்டிடம் குறுக்கே இருந்துள்ளது. இதனால் வித்தியாசமாக சிந்தித்த இன்ஜினியர்கள் கட்டிடத்தின் நடுவில் ரயில் பாதையை அமைத்து விட்டார்கள்.

இந்த ஏற்பாடு மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தா வண்ணம், சைலென்சிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயிலின் சத்தம் அங்குள்ள மக்களின் காதுகளில் விழாது. அதுமட்டுமின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் அங்கு ரயில் நிலையம் இருக்கும்.