நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல்..!

0
67

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நிலவும் வரட்சி காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாகவும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நீர் நுகர்வு

தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.