உடல் எடையை குறைக்க வெறும் வயிற்றில் இஞ்சி எலுமிச்சை நீர்..

0
717

பொதுவாகவே அகைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு முன்னே தள்ளிக் கொண்டும் நிற்கும் தொப்பையை குறைக்க முடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது.

தினசரி உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற பழக்கங்கள் உடல் எடையை குறைக்க ஓரளவுக்கு உதவும் என்றாலும், அதிக எடையை குறைப்பதற்கு இதை மாத்திரம் செய்வது போதுமானதாக இருக்காது.

அத்துடன் குடலில் தங்கியுள்ள கழிவுகளை அவ்வப்போது சுத்தமாக்கி வெளியேற்ற வேண்டியதும் அவசியம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடுகின்றறோம் என்பது குறித்து அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் எடை இழப்பு பானமான இஞ்சி மற்றும் எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இஞ்சி எலுமிச்சை பானத்தின் நன்மைகள்  

இஞ்சி எலுமிச்சை நீர் சமீப காலங்களில் இயற்கையாகவே உடல் எடையை குறைக்கும் சூப்பர் உணவாக அனைவராலும் நம்பப்படுகின்றது.

வெறும் வயிற்றில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளும்போது, அதன் பல நன்மைகளுடன் தொப்பை கொழுப்பைக் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

வெறும் வயிற்றில் இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம் பருகுவதன் மூலம் ஒரு முழுமையான உணர்வு கிடைக்கின்றது. அதனால் அதிகமாக பசி உணர்வை கட்டுப்படுத்தி இலகுவாக உடல் எடையை குறைக்கலாம்.

இஞ்சி எலுமிச்சை நீர் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, சிறந்த செரிமானத்தையும் ஊக்குவிப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றது. உடல் எடையை குறைப்பதில் நச்சு நீக்கம் முக்கிய இடம் வகிக்கின்றது.

இஞ்சி எலுமிச்சை நீர் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதில் பெரும் பங்காற்றுகின்றது. இஞ்சி மற்றும் எலுமிச்சை நீர் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதற்கும் துணைப்புரிகின்றது.

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இது வீக்கத்தைக் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகின்றது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இஞ்சி எலுமிச்சை நீர் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். குறிப்பாக தொப்பை பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வை கொடுக்கின்றது.