முதல் நாள் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள்: கலந்து கொண்ட பிரபலங்கள் யார் தெரியுமா?

0
84

முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிக்கும் வரும் ஜீலை மாதம் 12ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து அதாவது நேற்றிலிருந்து ப்ரீ வெட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ப்ரீ வெட்டிங் தொடக்கநாளான நேற்று ஜாம் நகரில் கொண்டாட்டங்கள் களை கட்டின. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேட்மிட்டன் விளையாட்டு வீராங்களை சாய்னா நேவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சாய்னா சிவப்பு நிற உடையில் ஜொலிக்க, அவரது கணவர் பருப்பளி காஷ்யப் கறுப்பு நிற உடையில் கலக்குகிறார்.