பிரதமர் தினேஸ் குணவர்தனவின் உலங்குவானூர்தி பயணத்தினால் மாத்தறையில் குழப்பம்

0
87

பிரதமர் தினேஸ் குணவர்தன பயணித்த உலங்குவானூர்தி மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தவறினால் மாத்தறை விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலின் இறுதிச் சடங்கிற்கு பிரதமர் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடலில் இருந்து பலத்த காற்று வீசியதால் இந்த நிலை ஏற்பட்டதாக மாத்தறை விடுதியின் முகாமையாளர் விளக்கமளித்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது, ​​உணவு, பானங்கள் பெற்றுக்கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் மீது மணல், தூசி, குப்பைகள் விழுந்து பெரும் சிரமத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகின்றது.

சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு

இந்நிலையில், உலங்குவானூர்தி சரியான முறையில் தரையிறக்கப்படாமைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இறுதிச் சடங்குகள் பல முக்கியஸ்தர்கள் வரவிருந்ததால், மாத்தறை பகுதியை விரைவாக சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், உலங்குவானூர்தியிலிருந்து பத்திரமாக தரையிறங்கிய பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன இறுதி சடங்கிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் மாத்தறை விடுதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.