உணவு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் படை கொடூர தாக்குதல்..!

0
90

காஸா நகரத்தில் உணவு பொருட்களுக்காக  காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் அதிகமானோர் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகம், இஸ்ரேல் ராணுவம் மக்கள் திரள் நோக்கி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது. ஆனால் சம்பவ இடத்திலிருந்தவர்கள்  உதவி பொருள்கள் வந்த டிரக்கிலிருந்து மாவு மற்றும் கேனில் அடைக்கப்பட்ட பொருள்களைப் பாலஸ்தீனர்கள் எடுக்க முயன்றபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.

போர் தொடங்கியபோது, காஸாவின் நகரப்பகுதி மற்றும் வடக்கு காஸாவின் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலில் உள்ளாகின.

இந்த பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டதோடு உணவு கொண்டுவரும் டிரக்குகள் இந்த மாதத்தில் பெரியளவில் வருவது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் திரள் கட்டுக்குள் வராமல் இருந்தது.

காஸாவின் பெரும்பாலான பகுதிகளில் உதவி பொருள்களைக் கொண்டு சேர்ப்பதில் இன்னும் சவால் நீடிப்பதாக அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சட்ட ஒழுங்கின்மை மற்றும் விரக்தியில் உள்ள மக்கள் டிரக்குகளை வழிமறித்து தங்களுக்கான பொருள்களை எடுத்து கொள்வது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

போர் தொடங்கியது முதல் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.