குடிபோதையில் விபத்து; எதிர்நீச்சல் நடிகையின் ஆண் நண்பர்தான் காரணமா?: வெளியான தகவல்

0
147

கடந்த வருடம் எதிர்நீச்சல் தொடர் நடிகை மதுமிதா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை மதுமிதா சமீபத்தில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் பயணிக்கும்போது தவறான பாதையில் சென்று, எதிரில் வந்த பொலிஸ் வாகனத்தின் மீது மோதியுள்ளார்.

குறித்த பொலிஸார் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை மதுமிதாவும் அவரது ஆண் நண்பரோடு குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் நடிகை மதுமிதா இதுகுறித்து கூறுகையில், “நான் காரை ஓட்டல, என் நண்பன்தான் கார் ஓட்டினான். சிறிய விபத்து. என் நண்பன்தான் தப்பு பண்ணிட்டான். அதில் பெரிதாக பேச எதுவுமில்லை” என கூறியுள்ளார்.