ரணில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்: தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை – ரஞ்சித் மத்தும பண்டார

0
114

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் எனவும் அப்படியான ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கினிகத்தேன ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்திய பொருட்களை புறக்கணிக்குமாறு கூறிய அனுரகுமார இந்தியாவுக்கு சென்றார்

ஐக்கிய மக்கள் சக்தி, கிராம, தொகுதி உட்பட அனைத்து மட்டங்களிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், அவர் தேர்தலில் போட்டியிடுவார் என நான் நினைக்கவில்லை.

இநதியாவின் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம். இந்திய பொருட்கள் இருக்கும் கடைகளை மூடுங்கள் எனக்கூறிய ஜே.வி.பியின் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு சென்றார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப்பெற வேண்டுமாயின் சகல அணிகளையும் இணைத்துக் கொள்வது அவசியம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றிப்பெறும் என்பது மொட்டுக்கட்சியினருக்கு தெரியும்.

சரத் பொன்சேகா கட்சியின் கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. எனினும் அவர் கட்சியின் கொள்கைகளுக்கு அமைய செயற்பட வேண்டியது அவசியம். கட்சியின் தலைவரை விமர்சிப்பது என்பது கட்சிக்கு ஏற்படுத்தும் பாதிப்பு எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 60 பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டதுடன் அவர்களுக்கான உறுப்பினர் அட்டைகளை மத்தும பண்டார வழங்கியுள்ளார்.