நடிகர் விஜயகுமார் பேத்திக்கு வழங்கிய சீதனம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி..

0
165

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் சீதனம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகுமார் பேத்தி திருமணம்

நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கண்ணிற்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அதில் இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர். இவரது கணவரும் ஒரு மருத்துவர்.

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா? | Vijayakumar Granddaughter Diya Wedding Dowry

சினிமா பக்கம் வராமலே தனது குடும்பத்தை மருத்துவப் பக்கம் அனிதா விஜயகுமார் கொண்டு சென்றார்.

இவருக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் கோகுல் என்கிற மகனும் உள்ளனர். இதில் இவரது மகளான தியாவிற்கு கடந்த 19 ஆம் திகதி கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் தியா மற்றும் தியாவின் கணவருக்கு வழங்கப்பட்டுள்ள சீதனம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.

வழங்கப்பட்ட சீதனம் என்ன?

விஜயகுமார் தனது மூத்த மனைவியின் மகள்களை மருத்துவத்திற்கு படிக்க வைத்து விட்டார். மகனான அருண்விஜயின் மனைவியின் தந்தையும் பிரபல மருத்துவர். எனவே அவருக்கும் கோடிக்கணக்கில் சொத்து இருக்கும். தாய்மாமன் சீராக நகை பணம் என அள்ளி கொடுத்துள்ளார்.

கல்யாணத்துக்கே கோடிக்கணக்கில் செலவழித்து விட்டனர். சீதனமாக 300 சவரன் நகையும் இரண்டு பங்களாவையும் தியாவுக்கு விஜயகுமார் குடும்பம் வழங்கியுள்ளது.

மேலும் மணமகன் மணமகள் தியாவின் காலை தொட்டு கும்பிடுகிறார். இது போன்ற ஒன்றை இதுவரையில் எந்த ஒரு திருமணத்திலும் பார்த்து இருக்க முடியாது.

குடும்பம் முழுவதும் டாக்டர் மற்றும் சினிமா பிரபலங்களாக இருப்பதால் புது மாப்பிள்ளை இப்படி செய்தாரா என தெரியவில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.