நான் நலமுடன் இருக்கிறேன்: விபத்து குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; பேஸ்புக்கில் வைராலாகும் பதிவு

0
107

நான் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்து போலி பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“கவலையடைந்து அழைப்புகளை ஏற்படுத்தும் நண்பர்களே இதுவொரு போலிப் பிரச்சாரம், நான் நலமுடன்” இருக்கின்றேன்.” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம பகுதியில் சுனில் ஹந்துநெத்தி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்தச் செய்தி போலியென மறுத்துள்ள அவர் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.