யாழில் தவளையுடன் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0
154

யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று(16.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஐஸ்கிறீமை விற்பனை செய்தவர் சுன்னாகம் பகுதியில் இயங்கும் ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே , ஆலய சூழலில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள்
கடந்த புதன்கிழமை(14) ஆலய சூழலில் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் ஐஸ்கிறீமிற்குள் தவளை ஒன்று காணப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கை

இதேவேளை சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் நடாத்தி செல்லப்பட்ட உணவகம் ஒன்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளருக்கு 36 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.