ரஷ்யாவுடன் போரில் உக்ரைன் வெற்றி பெற வாய்ப்பில்லை: போரில் தோற்றால் புடின் கொல்லப்படுவார் – எலோன் மஸ்க்

0
124

உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்காது எனவும் தோல்வியடைந்தால் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் கொல்லப்படுவார் எனவும் உலக செல்வந்தரான எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியரசு கட்சியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விவாதத்தின் போதே மாஸ்க் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்பதற்கான வாய்ப்பில்லை, புடின் தோற்றால் கொல்லப்படுவார்

உக்ரைன் போர் விடயத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பின்வாங்குவார் என நினைக்கவில்லை. தோற்றால், அவரை கொலை வாய்ப்பு உள்ளது.

இதனால் புடின் இந்தப் போரைத் தொடருவார். புடின் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றார் எனவும் மாஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

எலன் மாஸ்க் இப்படியான கருத்துக்களை வெளியிட்டிருப்பது இது முதல் முறையால்ல கடந்த காலங்களிலும் அவர் இப்படியான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மாஸ்க், ரஷ்ய ஜனாதிபதி குறித்து நான் கடந்த காலங்களிலும் இதனையே கூறியிருந்தேன். அப்போது என்னை பலரும் விமர்சித்தனர்.ஆனால் உண்மை வேறு என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்நாடு வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்ப்பது சிறந்தல்ல.

போர் நீண்டகாலம் நடந்தால் உக்ரைனுக்கு ஆபத்து ஏற்படும். அத்துடன் அமெரிக்க அறிவித்துள்ள பொருளாதார உதவியால் உக்ரைனுக்கு எந்த பயனும் ஏற்படாது.

மேலும் ரஷ்யாவை அடக்குவதற்கு எமது SpaceX நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனங்களும் சிறப்பான எதனையும் செய்யவில்லை.

SpaceX ஏற்கனவே உக்ரைனுக்கு Starlink சேவைகளை வழங்கி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் தகவல் தொடர்பு துறைக்கு இது முக்கியமானதாக மாறிவிட்டது.

எது எப்படி இருந்த போதிலும் போலில் ஈடுபட்டுள்ள இருத்தரப்பிலும் உயிரிழப்புகளை தடுப்பதே தமது நோக்கம் என எலன் மாஸ்க் கூறியுள்ளார்.