யாழ்ப்பாண மரக்கறிகளால் தம்புள்ளை சந்தையில் சடுதியான விலை குறைவு..

0
60

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கு என்பன தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

விலை குறைவு 

இதனால், கடந்த காலத்தில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்த அனைத்து வகையான மரக்கறிகளின் விலைகளும் 65 தொடக்கம் 70 வீதம் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக 2 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த கரட், தற்போது ஒருகிலோ 500 ரூபா தொடக்கம் 600 ரூபாவாக குறைந்துள்ளது.

மத்திய வங்கி

அதேநேரம், கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மரக்கறிகளால் தம்புள்ளை சந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றம் | Jaffna Vegetables Revolutionized Tambulla Market

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இறக்குமதி செலவினம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.