ஆபரேஷன் தியேட்டரில் திருமண போட்டோஷூட் நடத்திய மருத்துவர்!

0
134

வித்தியாசமாக போட்டோஷூட்டை நடத்த விரும்பிய மருத்துவர் ஒருவர் ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய நிலையில் குறித்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் அபிஷேக். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிக்கு சேர்ந்துள்ளார்.

 அறுவை சிகிச்சை பிரிவில் போட்டோஷூட் 

இந்த நிலையில் அவருக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இந்நிலையில் அபிஷேக் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய ‘போட்டோஷூட்டை’ வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.

அதன்படி தான் பணிபுரியும் மருத்துவமனையில் போட்டோஷூட் நடத்த முடிவு செய்தார். அப்போது அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும் அவருக்கு மணப்பெண் உதவுவது போலவும் அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி எழுந்து அமர்வது போலவும் போட்டோஷூட் நடத்தி உள்ளனர்.

அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ள நிலையில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோஷூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும் பலரும் கடுமையாக கண்டித்தனர்.

இந்த நிலையில் ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.