மார்ச் மாதத்துக்குப் பின் எண்ணெய் விலையில் மாற்றம்

0
89

வாடிக்கையாளருக்கு நன்மைகளை வழங்க தாம் பணியாற்றி வருகின்றதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்துக்குப் பிறகு எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

ஜனாதிபதி ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

அவர் மேலும் தெரிவிக்கையில், கடினமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாடு படிப்படியாக எழுச்சி பெறும் சூழ்நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். ஒரு காலத்தில் நாம் அனைவரும் எண்ணெய் வரிசையில் நின்றோம்.

மார்ச் மாதத்துக்குப் பின் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம்: இராஜாங்க அமைச்சர் கூறும் விடயம் | Petrol Diesel Price In Sri Lanka Fuel Price

எனினும் தற்போது அனைவரின் அர்ப்பணிப்புடன், நிலையான எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க முடிந்துள்ளது. சமீபகால வரலாற்றில் தற்போது மிகப்பெரிய அளவிலான எண்ணெய் இருப்பு வைத்திருக்கிறோம்.

பெட்ரோலிய சட்ட நிறுவன டொலர்களின் சமநிலையையும் எங்களால் பராமரிக்க முடிந்துள்ளது. டிசம்பர் முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வது சகஜமாகிவிட்டது.

எண்ணெய் விலை அதிகரிப்பு

இதற்குக் காரணம், ஐரோப்பாவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், எண்ணெய் பயன்பாடு அதிகமாக உள்ளது. அந்த காலக்கட்டத்தில் தேவை அதிகரிப்புடன் ஒவ்வொரு ஆண்டும் விலை உயர்வு ஏற்படும் என்றே கூற வேண்டும்.

மார்ச் மாதத்துக்குப் பின் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம்: இராஜாங்க அமைச்சர் கூறும் விடயம் | Petrol Diesel Price In Sri Lanka Fuel Price

அதன்படி, குளிர்காலம் முடிவடையும் நிலையில், மார்ச் மாதத்துக்குப் பிறகு எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். எனவே வாடிக்கையாளருக்கு நன்மைகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.