இந்தியாவின் இளம் கோடீஸ்வர தொழிலதிபர் பேர்ல் கபூர்.. மொத்த சொத்து மதிப்பு தெரியுமா

0
135

இந்தியாவின் இளம் தொழிலதிபரான பேர்ல் கபூர் தற்போது $1.1 பில்லியன் லொடர்களுக்கு அதிபதியாக உருவெடுத்த வெற்றிக்கதை குறித்து பார்ப்போம்.

இளம் வயதில் சாதித்த பேர்ல் கபூர்

நம்மில் பலர் 30 வயதில் தான் மிகப்பெரிய செல்வந்தராக மாறிவிட வேண்டும் என்ற இலக்கை முன்வைப்போம், ஆனால் பேர்ல் கபூர் என்ற இந்திய இளைஞர் தன்னுடைய 27வது வயதிலேயே கோடீஸ்வராக உருவெடுத்து அசத்தியுள்ளார்.

பேர்ல் கபூர்(Pearl Kapur) மற்றும் சன்னி வகேலா (Sunny Vaghela) ஆகியோரால் நிறுவப்பட்ட Zyber 365 நிறுவனம் இந்திய சந்தையில் வெற்றி பாதையில் சென்று கொண்டுள்ளது.

இந்த Zyber 365 நிறுவனம் அதன் அதிநவீன EVM-இணக்கமான Web3 Layer 1 Proof Authority-யாக அறியப்படுகிறது. பேர்ல் கபூர் அவரது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகளின் SDG இலக்குகளுக்கான ஈடுபாட்டிற்காக நன்கு அறியப்படுகிறார்.

சன்னி வகேலா இந்தியாவின் சிறந்த நெறிமுறை ஹேக்கர்களில் ஒருவராக அறியப்படுகிறார். Zyber 365ன் உறுதியான வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து Sram & Mram குழுமம் $100 மில்லியன் மூதலீடு செய்துள்ளது.

india

இதுப்போன்ற முதலீடுகளின் காரணமாக ஸ்டார்ட்அப் நிறுவனமான Zyber 365 தோராயமாக ரூ.9840 கோடி மதிப்பை தொட உதவிகரமாக இருந்தது.

சொத்து மதிப்பு

நிறுவனத்தின் சீரான வெற்றி 27 வயது இளைஞரான பேர்ல் கபூரின் நிகர சொத்துமதிப்பை  $1.1 பில்லியன் லொடராக உயரத்தியுள்ளது.

Zyber 365 என்ற நிறுவனத்தை பேர்ல் கபூர் தொடங்குவதற்கு முன்னதாக AMPM Store  மற்றும் Antier Solutions ஆகிய நிறுவனங்களின் வணிக ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

பேர்ல் கபூர் Billion Pay Technologies என்ற மற்றொரு நிறுவனத்தையும் நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.