200 கோடி ரூபா மோசடி; இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

0
138

200 கோடி ரூபா மோசடி வழக்கில் இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருடன் பாலிவுட் நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

200 கோடி ரூபா மோசடி; இலங்கை நடிகை தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | 200 Crore Fraud Jacqueline Fernandez

மோகன் சிங் மனைவியை மிரட்டி 200 கோடி மோசடி

போர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி 200 கோடி பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜெக்கலின் பெயர் இடம்பெற்றது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும் தொடர்ந்து அவருடன் பண பரிவர்த்தனை வைத்துக் கொண்டதாக ஜெக்கலின் மீது குற்றம்சாட்டப்படது.

200 கோடி ரூபா மோசடி; இலங்கை நடிகை தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | 200 Crore Fraud Jacqueline Fernandez

வழக்கில் ஜெக்கலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்றார். ஆனால் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் பெற்றார். திரைப்பட நடிகையாக இருப்பதால் ஜெக்கலின் பெர்னாண்டஸ் அடிக்கடி வெளிநாடு செல்ல நேரிடும் என நீதிமன்றத்தில் ஜாக்குலின் தரப்பு கூறியது.

இதனையடுத்து ஜெக்கலின் நீதிமன்ற நிபந்தனைகளை தவறாக பயன்படுத்தவில்லை என்ற அடிப்படையில் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. அந்த வகையில் ஜெக்கலின் பெர்னாண்டஸ் அவர் செல்லும் நாடுகள், அவர் தங்கியிருக்கும் இடம், தொடர்பு எண்கள் போன்ற பிற விவரங்கள் உட்பட அவரது பயணத்தின் விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து பணமோசடி வழக்கில் தன் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்தித்துள்லதாக தெரிவிக்கப்படுள்ளது.