புற்றுநோய் சிகிச்சையின்போது இளவரசரின் முன்னாள் மனைவி சாரா பெர்குசனுக்கு கண்டறியப்பட்ட நோய்..

0
123

இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா பெர்குசனுக்கு வீரியம் மிக்க மெலனோமா நோய் கண்டறியப்பட்டுள்ளது. 

மார்பக புற்றுநோய்

The Duchess of York சாரா பெர்குசன் (Sarah Ferguson) மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு 64 வயதாகும் சாராவுக்கு மார்பக புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சைக்காக உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு சாராவுக்கு வீரியம் மிக்க மெலனோமா நோய் கண்டறியப்பட்டுள்ளது. 

Sarah Ferguson

மெலனோமா 

சாராவின் செய்தித் தொடர்பாளர் இதனை கூறியுள்ளார். அதாவது, மெலனோமா (Melanoma) என்பது ஒருவகை தோல் புற்றுநோய் ஆகும்.

இதனைத் தொடர்ந்து, சாரா பெர்குசனுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு ‘இது எளிதான நேரம் அல்ல; ஆனால் அவர் நல்ல மனநிலையுடன் இருக்கிறார்’ என தெரிவிக்கின்றனர். 

Sarah Ferguson

இந்த புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், சாரா பெர்குசனுக்கு மேலும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும், ஆனால் அது பரவியிருக்கிறதா என்பதை தீர்மானிக்க கூடுதல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.

மெலனோமா என்ற புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். முக்கியமாக சூரியன் அல்லது சூரிய படுக்கையில் இருந்து வரும் புற ஊதா ஒளியின் வெளிப்பாடு காரணமாக ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.    

Sarah Ferguson

Sarah Ferguson/Prince Andrew