மாற்று கிட்னி சிகிச்சையால் 108 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் நபர்

0
119

வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஹவுட்டன் லெ ஸ்ப்ரிங் நகரில் வசித்து வரும் 108 வயதுடைய சூ வெஸ்ட்ஹெட் வெஸ்ட்ஹெட்டிற்கு மாற்று கிட்னி மருத்துவ சிகிச்சையினால் ஆரோக்கியமாக வாழ்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது 12-ஆவது வயதில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 25-ஆவது வயதில் டயாலிசிஸ் செய்து கொள்ள தொடங்கினார்.

நீண்ட சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு நோய் தீரவில்லை. 1970களின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரகத்துறை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

1973ல் வெஸ்ட்ஹெட்டின் தாயார் ஆன் மெட்கால்ஃப் (Ann Metcalf) சிறுநீரகம் தர முன்வந்ததையடுத்து முறையான பரிசோதனைக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்து தாயாரின் சிறுநீரகம், வெஸ்ட்ஹெட்டிற்கு பொருத்தப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை ராயல் விக்டோரியா மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அடுத்த 5 வருடங்களுக்கு கூட தான் உயிருடன் இருக்க முடியும் என வெஸ்ட்ஹெட் அப்போது நம்பவில்லை.

ஆனால், 50 வருடங்கள் கடந்தும், எந்தவிதமான சிறுநீரக சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார், வெஸ்ட்ஹெட். இந்த நிகழ்வு, தற்போது வெஸ்ட்ஹெட்டிற்கு உடல்நல மேற்பார்வையும் ஆலோசனையும் வழங்கி வரும் சண்டர்லேண்ட் ராயல் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்த வெஸ்ட்ஹெட்டுடன் உரையாடிய அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.