17 முறை தொடர் தோல்வி… இறுதியில் சமூக ஊடக பக்கம் ஒன்றை உருவாக்கி சாதனை

0
129

தென்னிந்தியாவின் பெங்களூரு பகுதியை சேர்ந்த Ankush Sachdeva தொடர்ந்து 17 முறை தொழில் தொடங்கி, அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், சமூக ஊடக பக்கம் ஒன்றை இறுதியில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

17 முறை புதிய நிறுவனங்கள்

பிரபலமான கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பிறகு, பலர் வேலைக்கு சேராமல் தனியாக நிறுவனம் தொடங்க முயற்சி மேற்கொள்கின்றனர். அப்படி 17 முறை புதிய நிறுவனங்களை தொடங்கி தோல்வி கண்டவர் தான் Ankush Sachdeva.

தனது ஐ.ஐ.டி நண்பர்கள் இருவருடன் இணைந்து Ankush Sachdeva உருவாக்கியது தான் Sharechat செயலி. 2015 ஜனவரி மாதம் இவர்கள் மூவரும் Mohalla Tech என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

2017 அக்டோபர் மாதம் நான்கு மொழிகளில் பயனாளர்கள் பயன்படுத்தும் வகையில் Sharechat செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து தனியாக Sharechat நிர்வாகிகள் குழு உருவாக்கப்பட்டு, அதில் தலைமை நிர்வாக அதிகாரியாக Ankush Sachdeva பொறுப்பேற்றார்.

சொத்து மதிப்பு ரூ 914 கோடி

Sharechat நிறுவனம் பெங்களூருவில் இயங்கி வந்தாலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கூகிள் நிறுவனத்தின் ஆதரவுடன் Sharechat நிறுவனம் இயங்கி வருகிறது.

ஆயிரத்திற்கும் மேல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். Sharechat நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது 5 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. இந்திய பணமதிப்பில் ரூ 41,000 கோடி.

மட்டுமின்றி Ankush Sachdeva-ன் சொத்து மதிப்பு ரூ 914 கோடி என்றும் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் செயல்பட்டுவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராகவும் பணியாற்றியுள்ளார் Ankush Sachdeva. அதன் பின்னரே Sharechat செயலியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.