வடகாஸாவுக்கான மருத்துவ உதவியை நிறுத்தியது WHO: 12 நாட்களாக எந்த உதவியும் செல்லவில்லை

0
135

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளை அனுப்பவிருந்த உலகச் சுகாதார நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாத காரணத்தால் அதை நிறுத்தியுள்ளது.

அந்த மருத்துவ பொருள்கள் அல்அவ்தா மருத்துவமனைக்கும், மற்றொரு மருந்தகத்திற்கும் கொண்டு செல்ல இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல முடியாமல் போவது இது நான்காவது முறையாகும். வடகாஸாவுக்கு உதவிகள் சென்று 12 நாள்கள் ஆகிறது.

கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்கள், நடமாட்டக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தெளிவான தகவல்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவை எடுத்ததாக உலக சுகாதார நிறுவனம் சமூக ஊடகம் வழி தகவல் வெளியிட்டது.

5 மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவப் பொருள்களை ஜனவரி 7ஆம் திகதி அனுப்ப திட்டமிடப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

சரியான நேரத்திற்கு மருத்துவ உதவிகள் கிடைக்காவிட்டால் வடகாஸாவில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் செய்வது அறியாது பொதுமக்கள் கலங்கி நிற்கின்றனர்.