உளவு பார்த்த பெண் உட்பட 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது ஈரான்!

0
142

இஸ்ரேலில் மொசாட் உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்றையதினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் ஆள் கடத்தல், அச்சுறுத்துதல், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்தல், மொபைல் போன்களை திருடுதல் உட்பட பல குற்றங்களில் இஸ்ரேலுக்காக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

உளவு வேலை பார்த்த பெண் உட்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! | Israel Mossad 4 Peoples Spying Death Sentence Iran

இதன்போது, “ஈரானுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்ட நசிம் நமாசி என்ற பெண், வஃபா ஹனாரெ, அரம் ஒமாரி, ரஹ்மான் பர்ஹாசோ என்ற 4 பேர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நால்வரும் ஈரான் உளவு துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மே மாதம் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மிக பெரிய திட்டத்திற்காக இஸ்ரேலால் தயார் செய்யப்பட்டனர்” என ஈரான் நீதிமன்ற செய்திகளை வெளியிடும் மிசான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.