ஓராண்டாக நீடிக்கும் போர்; பணியாத உக்ரைன்; பின்வாங்கும் புடின்

0
169

கடந்த ஆண்டு ரஷியா தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் அந்த போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து மிகப்பெரிய பாதிப்புகளை ரஷியா ஏற்படுத்தி உள்ள நிலையில் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். உக்ரைனுக்குள் புகுந்த ரஷிய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன.

பணியாத உக்ரைன்

ஓராண்டாக நீடிக்கும் போர்; பணியாத உக்ரைன்; பின்வாங்கும் புடின் | Ukraine Russia War A Retreating Putin

என்னதான் உக்ரைன் மீது உக்கிர தாக்குதலை ரஷ்யா  மேற்கொண்டாலும் உக்ரைனை இது வரை ரஷியாவால் பணிய வைக்க இயலவில்லை.

உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன. இதன் காரணமாக ரஷியாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை.

இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷியாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன. இதையடுத்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓராண்டாக நீடிக்கும் போர்; பணியாத உக்ரைன்; பின்வாங்கும் புடின் | Ukraine Russia War A Retreating Putin

எனினும் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மிக ரகசியமாக அவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் புதின் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில்  போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.