மாயாவ நம்பாத அறிவுரை கூறிய விக்ரம் தங்கை! வெளியான அடுத்த ப்ரோமோ

0
108

சரவண விக்ரமின் தங்கை அறிவுரை கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சரவண விக்ரமின் வீட்டில் இருந்து குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். விக்ரமை தனியாக அழைத்துச் சென்று பிக் பாஸ் வீட்டு நடப்பை தங்கை எடுத்துச் சொல்லியிருக்கிறார் .

உன் கேமை தனியா விளையாடு. நான் போனதுக்கு அப்புறம் அங்க அப்படி போய் உட்காருவது யோசிக்கிறது என சொல்லும்போதே அதை தான் பண்ணுவேன் யோசிப்பேன் என்று விக்ரம் கூறுகின்றார். பின்னர் பூர்ணிமாவை கூட ஒரு அளவுக்கு நம்ப முடியும். ஆனால் மாயாவை என்னால் நம்ப முடியாது.

நீ 5 ஸ்டார் வாங்கியதில் யாரெல்லாம் சந்தோஷப்பட்டிருப்பாங்கனு நினைக்கிற?. இவனுக்கெல்லாம் எதுக்கு 5 ஸ்டார்னு மாயா சொன்னார். எதுக்கு கொடுத்தீங்கனு கேட்டார் என்றார்.

விக்ரமின் தங்கை சொல்ல வந்ததை சரியாக சொல்லிவிட்டார். விக்ரமுக்கு 5 ஸ்டார் கிடைத்ததில் ஹவுஸ்மேட்ஸ் யாருக்கும் சந்தோஷம் இல்லை. அவருக்கு இப்படி 5 ஸ்டார் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்களை விட அவர்களின் குடும்பத்தார் எல்லாம் சூப்பராக பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள்.

பேசாமல் அவர்களையே போட்டியாளர்களாக்கியிருக்கலாம் போலயே. விக்ரம் தங்கச்சி, நிக்சன் அப்பா, ரவீணா அம்மா எல்லாம் போட்டியாளர்களாக வந்தால் பிக் பாஸ் வீடு அருமையாக இருக்கும் என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.