2022 கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பானின் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த பெண் மரணம்

0
149

ஜப்பான் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டவர்கள் வாழும் நாடு என்பதுடன் அந்த நாட்டில் பலர் நீண்ட காலம் வாழ்ந்து சாதனைகளையும் படைத்துள்ளனர்.

பெண்மணி ஒருவர் மிக நீண்டகாலம் உயிர் வாழ்ந்ததுடன் 116 வயதில் தனக்கு பிடித்த பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு அவர் செவ்வாய்க்கிழமை காலமானதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

Fusa Tatsumi என்ற இந்த பெண்மணி ஒசாகாவின் காஷிவாரா நகரில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் Fusa Tatsumi இறந்துவிட்டதாக அங்குள்ள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Fusa Tatsumi இந்த பெண்மணி ஜப்பானிய வரலாற்றில் 116 வயதை எட்டிய ஏழாவது ஜப்பானியர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் அவரை உலகின் மிக வயதான நபராக அறிவித்தது.

கடந்த ஆண்டு ஜப்பானில் 119 வயதான கேன் தனகா இறந்த பின்னர், ஜப்பானின் இரண்டாவது மூத்த பெண்மணியாக Fusa Tatsumi அறிவிக்கப்பட்டார். இந்த பெண்மனி இரண்டு உலகப் போர்கள், பேரழிவுகள் மற்றும் கொரோனா போன்ற தொற்று நோய்களைப் பார்த்துள்ளார்.

1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பிறந்த Fusa Tatsumi கணவர் ஒரு விவசாயி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதியோர் இல்லத்திற்கு செல்லும் வரை மிகவும் ஆரோக்கியமாக இருந்த அவர் தோட்ட வேலை மற்றும் தனிப்பட்ட வேலைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்.

70 வயதில் ஏற்பட்ட தொடை எலும்பு முறிவை தவிர, அதற்கு முன்னர் அவருக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. 106 வயதிலும் முதியோர் இல்லத்திற்கு செல்லும் வரை அனைத்து பணிகளையும் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

முதியோர் இல்லத்தில் அனைத்து ஊழியர்களையும் உற்சாகப்படுத்தி வந்தார் என அதிகாரிகள் கூறுகின்றனர். Fusa Tatsumiவின் மறைவை அறிந்த ஒசாகா ஆளுநர் ஹிரோபுமி யோஷிமுராவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் செப்டம்பரில் நடந்த Fusa Tatsumi பிறந்தநாள் விழாவை நினைவு கூர்ந்துள்ள அவர், அந்த பெண்மணி எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார் என்பதை நேரில் பார்த்ததாகவும் இந்த பெண்மணியை போல எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவித்தால், உடல்நலக் குறைபாடுகள் இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியும் எனவும் கூறியுள்ளார்.