டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன.
உலகின் டாப் 100 சிறந்த உணவு வகைகளை டேஸ்ட் அட்லஸ் என்ற குரோஷியன் டிராவல் அனுபவ வழிகாட்டி நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது. இதில் இந்திய உணவு வகைகள் முன்னணி இடங்களை பிடித்துள்ளது.
டாப் 100 சிறந்த உணவுகள்
![](https://tamilnews.com/wp-content/uploads/2023/12/image-204.png)
இந்த பிரிவில் பூண்டு வெண்ணெய் ரொட்டி(நான்) 7வது இடத்தை பிடித்துள்ளது. அத்தோடு முர்க் மக்கானி (பட்டர் சிக்கன்) 43வது இடத்தை பிடித்துள்ளது. அத்தோடு சிக்கன் டிக்கா 47வது இடத்தையும் 48 இடத்தை சிக்கன் தந்தூரி-யும் பிடித்துள்ளது.
முதலிடத்தில் பிரேசிலின் மாட்டிறைச்சி கட் பிக்கன்ஹா (Brazilian beef cut Picanha) பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து பிளாட்பிரெட் ரொட்டி கனாய், கிளறி-வறுத்த பாட் கப்ராவ், பிஸ்ஸா நெப்போலிடெனா மற்றும் டம்ப்லிங்ஸ் குட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளது.